தற்காலத்‌ தமிழ்‌ மரபுத்தொடர்‌ அகராதி

தற்காலத்‌ தமிழ்‌ மரபுத்தொடர்‌ அகராதி

Categories:
ISBN 10:
9788177200324
Pages:
484

Description:

Dictionary of Contemporary Tamil Idioms and Phrases (Tamil-Tamil-English)

Third Edition (2017)

ஒரு மொழியில்‌ மரபுத்‌ தொடர்கள்‌ தனித்தன்மை வாய்ந்தவை; பண்பாட்டு அடிப்படையில்‌ புரிந்துகொள்ளப்படவேண்டியவை. அவை கருத்தையும்‌ உணர்வையும்‌ கற்பனையுடன் வெளிப்படுத்துகின்றன. இதன்‌ மூலம்‌ அவை நம்முடைய மொழியை வளமிக்கதாகவும் ஈர்ப்புமிக்கதாகவும் ஆக்குகின்றன. தற்காலத்‌ தமிழில்‌ விரவிக் கிடக்கும்‌ எண்ணற்ற மரபுத்‌ தொடர்‌களைக் கொண்டு மொழி அறக்கட்டளை இந்த அகராதியை உருவாக்கியுள்ளது.

Purchase Here

தமிழ்நடைக்‌ கையேடு

Tamil Style Manual (in Tamil) Sixth Reprint: July …More

தமிழ்நடைக்‌ கையேடு

தமிழ்நடைக்‌ கையேடு

Categories:
ISBN 10:
9788177200317
Pages:
152

Description:

Tamil Style Manual (in Tamil)

Sixth Reprint: July 2015, Published by Adaiyaalam.

இந்தக்‌ கையேடு தற்காலத்‌ தமிழ்‌ உரைநடையை எழுத உதவும்‌ நெறிமுறைகளை விளக்குகிறது.

  • நிறுத்தற்குறிகளைப்‌ பயன்படுத்தும்‌ முறை
  • சொற்களைச்‌ சேர்த்தும் பிரித்தும்‌ எழுதுவதற்கான அடிப்படைகள்‌
  • எளிமையான பட்டியல்‌ முறையில்‌ சந்தி விதிகள்‌
  • எடுத்துக்காட்டுகள்‌ வழியாகச்‌ சந்தி விளக்கம்‌
  • பொருத்‌தமான இடங்களில்‌ பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தும் முறை
  • பிறமொழிச்‌ சொற்களைத்‌ தமிழில்‌ எழுதும்‌ முறை
  • ஆய்வுக்‌ கட்டுரைகளில்‌ குறிப்புகள்‌ தரும்‌ முறை

Purchase Here

சொல்வழக்குக்‌ கையேடு

A Manual for the Usage of Contemporary Tamil Words…More

சொல்வழக்குக்‌ கையேடு

சொல்வழக்குக்‌ கையேடு

Categories:
ISBN 13:
9788177201277
Pages:
128

Description:

A Manual for the Usage of Contemporary Tamil Words

Third Reprint: 2017, Published by Adaiyaalam.

இச்சிறு கையேட்டைப்‌ பயன்படுத்துவோர்‌ அல்லது படிப்பவர்கள்‌ தாங்கள்‌ கையாளும்‌ சொற்களின்‌ கூர்மையை உணர்வார்கள். சொற்கள் கூர்மை அடைய அடையக்‌ கருத்தை வெளிப்படுத்துவதும்‌ கூர்மை பெறுகிறது. சில சொற்களுக்குத்‌ தரப்பட்டிருக்கும்‌ செய்திகள்‌ புதிய இலக்கணம்‌ எழுத விரும்பும்‌ ஆய்வாளருக்குப்‌ பயன்படக்கூடும்‌. சில சொற்களின்‌ தகவல்களைப்‌ பொதுமைப்படுத்தினால்‌ ஒரு இலக்கண விதி பிறக்கலாம்‌ அல்லது ஏற்கெனவே இருக்கும்‌ விதி விரிவுபடுத்தப்படலாம்‌.

இலக்கணம்‌ மட்டுமல்லாமல்‌ பொதுவாகத்‌ தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்‌ தமிழில்‌ எழுதுவோருக்குப்‌ பயன்படும்‌.

Purchase Here

A Contemporary Tamil Prose Reader

The present reader contains a selection of 23 text…More

A Contemporary Tamil Prose Reader

A Contemporary Tamil Prose Reader

ISBN 10:
8190069438
ISBN 13:
9788190069434
Pages:
384

Description:

The present reader contains a selection of 23 texts of contemporary prose, 15 of creative writing and 8 of non-fiction, thereby providing a cross section of the myriad Tamil writings. The translations of the texts have been refined with inputs from native speakers of English.

A glossary of words of all the texts is appended at the end. In it, many of the words are given with textual context.

தற்காலத்‌ தமிழ்ச்‌ சொற்சேர்க்கை அகராதி

தற்காலத்‌ தமிழ்ச்‌ சொற்சேர்க்கை அகராதி

Categories:
ISBN 13:
9788190069441
Pages:
583

Description:

முதல்‌ நோக்கம்‌ தற்காலத்‌ தமிழில்‌, தரமான எழுத்து வழக்கில்‌ வழங்கும்‌ இயல்பான சொற்சேர்க்கைகள்‌ எனப்படும்‌ சொல்‌ இணைகளைத்‌ தொகுத்துத்‌ தருவதாகும்‌. எடுத்துக்காட்டு: “குடையை விரி”.

இரண்டாவது நோக்கம்‌, தொகுக்கப்பட்டிருக்கும்‌ சொற்சேர்க்கைகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகளைத்‌ தருவதாகும்‌. எடுத்துக்காட்டு: “unfurl the umbrella”.

தமிழ்‌ கற்பவர்களுக்கும், தமிழைக் கற்பிப்பவர்‌களுக்கும்‌, தமிழை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்க்க விரும்புகிறவர்‌களுக்கும்‌ இந்த அகராதி துணைபுரியும்‌.

Purchase Here

தமிழ்ச்‌ சொல்வளம்‌: சங்க இலக்கியம்‌ (தொகுதி 1: பூவுலகு)

தமிழ்ச்‌ சொல்வளம்‌: சங்க இலக்கியம்‌ (தொகுதி 1: பூவுலகு)

Categories:
Pages:
160

Description:

A Treasure of Tamil Words: Sangam Classics (Volume 1: The Earth)

First Edition: 2018, Published by Vela Publications

தமிழ்ச்‌ சொல்வளம்‌: சங்க இலக்கியம்‌ என்னும்‌ இந்தத்‌ தொகுதி சங்க இலக்கியச்‌ சொற்களைப்‌ பல்வேறு பொதுத்‌ தலைப்புகளில்‌ காணும்‌ ஒரு சோதனை முயற்சி.

பூவுலகு என்னும்‌ பொதுத்‌ தலைப்பில்‌ நான்கு உட்பிரிவுகள்‌ உள்ளன. இயற்கை வளம்‌, காலநிலை, புவியியல்‌, வசிப்பிடம்‌ என்னும்‌ இந்த நான்கு உட்பிரிவுகளில்‌ 718 சொற்கள்‌ தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லிற்கும்‌ இலக்கிய மேற்கோளும்‌, ஆங்கில மொழிபெயர்ப்பும்‌ தரப்பட்டுள்ளன.

Purchase Here

தமிழ்ச்சொல்வளம்‌: சங்க இலக்கியம்‌ (தொகுதி 2: உணவு, உடை, அணிகலன்‌)

தமிழ்ச்சொல்வளம்‌: சங்க இலக்கியம்‌ (தொகுதி 2: உணவு, உடை, அணிகலன்‌)

Categories:
Pages:
128

Description:

A Treasure of Tamil Words: Sangam Classics (Volume 2: Food, Clothes, Ornaments)

First Edition: 2020, Published by Vela Publications

உணவு, உடை, அணிகலன்கள்‌ ஆகிய மூன்று தலைப்புகளின்‌ கீழ்ச்‌ சங்க இலக்கிய நூல்கள்‌ பதிவு செய்துள்ள உண்ணும்‌ உணவு, உடுத்தும்‌ உடை, அணியும்‌ அணிகலன்கள்‌ குறித்த தகவல்கள்‌ இந்தத்‌ தொகுதியில்‌ திரட்டப்பட்டுத்‌ தரப்பட்டுள்ளன. முந்தையப்‌ பண்பாட்டின்‌ ஒரு கூறை முழுமையாகக்‌ காணக்கூடிய வாய்ப்பை இந்தத்‌ தொகுதி தருகிறது.

Purchase Here

டாக்டர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’

டாக்டர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’

Description:

மொழிபெயர்ப்பாசிரியர்: பா.ரா. சுப்பிரமணியன்

First Edition: 2021, Published by International Institute of Tamil Studies

A comprehensive translation of Robert Caldwell’s A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.

Purchase Here

 

கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு (கி.மு.300 முதல் கி.பி.1300 வரை)

கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு (கி.மு.300 முதல் கி.பி.1300 வரை)

ISBN 13:
9789381744925
Pages:
786

Description:

A Thematic Concordance of Terms from Inscriptions (from 300 B.C. to A.D. 1300)

First Edition: 2023, Published by Central Institute of Classical Tamil

Purchase Here